முகக்கவசம் அணியாதோருக்கு அபராதத் தொகை | கடலூர் செய்திகள் | Dinamalar
முகக்கவசம் அணியாதோருக்கு அபராதத் தொகை
Added : ஜன 20, 2022 | |
Advertisement
 

கடலுார்-முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதத் தொகை 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 'ஒமைக்ரான்' தொற்று அச்சுறுத்தும் சூழலில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளது.பொதுமக்கள் அவசியமில்லாமல் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். ஜவுளிக் கடை முதல் பெட்டிக் கடை வரை அனைத்து கடை உரிமையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.தங்கள் கடைகளுக்கு வரும் பொது மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படுவதுடன், கடைகளை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை பின்பற்றும் பொருட்டு அபராதத் தொகை 200 ல் இருந்து 500 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிடட்டுள்ளது.பொதுமக்கள் முகக் கவசம் அணிவதால், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். இரண்டாவது தவணை தடுப்பூசி போடாத நபர்கள் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X