சின்னாளபட்டி, : திண்டுக்கல் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில் ஏ.வெள்ளோட்டில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா நடந்தது. நத்தம் ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், அவைத்தலைவர் இளங்கோ, எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் எம்.ஏ.முருகன் முன்னிலை வகித்தனர். கட்சி கொடி ஏற்றி, எம்.ஜி.ஆர்., சிலைக்கு மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினர்.
கிழக்கு மாவட்ட செயலாளர் விசுவநாதன் தலைமை வகித்து அன்னதானம் வழங்கி பேசியதாவது: ஆட்சி, அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், மக்கள் நலப்பணிகளை அ.தி.மு.க, தொடர்ந்து முன்னெடுக்கும். மக்களின் தேவையை அறிந்து, அதிகாரிகள் மூலம் நேர்மையான முறையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.கிழக்கு மாவட்ட துணை செயலாளர் விஜயபாலமுருகன், மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன், மாணவரணி செயலாளர் கோபி, மாநில முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், ஒன்றிய துணை செயலாளர் கனிராஜா, ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முனுசாமி, ஜெ.,பேரவை செயலாளர் நாகராஜன், ஆத்துார் ஒன்றிய செயலாளர் சுப்ரமணி, மாவட்ட வழக்கறிஞர் இணைசெயலாளர் உதயகுமார், பொதுக்குழு உறுப்பினர் சுகன், மாவட்ட பிரதிநிதி முருகராஜ், ஒன்றிய செயலாளர்கள் மயில்சாமி, ஆர்.கே.சுப்ரமணி பங்கேற்றனர்.