மதுரை : மதுரை தி.மு.க., மீனவரணி அமைப்பாளர் முத்துகணேசன், மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜா. இவர்கள் மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த 200 பேர் கொரோனா வழிகாட்டுதல்களை மீறி, முன் அனுமதியின்றி 2021 ஜன.,3 ல் கிராமசபை கூட்டம் நடத்தியதாக கரிமேடு போலீசார் வழக்குப் பதிந்தனர்.முத்துகணேசன், ராஜா,'தவறாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. ரத்து செய்ய வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: வழக்குப் பதியப்பட்ட யாருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததாக உறுதி செய்யப்படவில்லை. இதனால் கொரோனா பரவ வாய்ப்பில்லை. வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்றார்.