நத்தம் : மத்திய அரசை கண்டித்து நத்தத்தில் இந்திய கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். கட்சி நிர்வாகி வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். தாலுகா பொறுப்பாளர் வினோத் முன்னிலை வகித்தார். சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் ராமர், பொன்னுச்சாமி, தவநூதன், நதியா உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.