கோயம்பேடு-கோயம்பேடு சந்தையில், மீண்டும் 'பிளாஸ்டிக்' பொருட்கள் அதிகரித்துள்ளதற்கு சாட்சியாக, சாலையோரத்தில் 'பிளாஸ்டிக்' கழிவுகள் நிரம்பிஉள்ளன.கோயம்பேடு சந்தையில், தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பைகள் உபயோகப்படுத்துவதை தடுக்க எம்.எம்.சி., பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.அதேசமயம், அவ்வப்போது கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, அபராதம் விதிக்கப்பட்டு, வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர்.இருப்பினும், சந்தையில் 'பிளாஸ்டிக்' பயன்பாடு குறைந்தபாடில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு சாட்சியாக, கோயம்பேடு 'ஏ' சாலையோரம், காய்கறி கழிவுகளில் மின்சாரம் தயாரிக்கும் இடத்திற்கு அருகில், நேற்று ஏராளமான 'பிளாஸ்டிக்' கழிவுகள் சேகரமாகியுள்ளன.இங்கு சேரகமாகும் குப்பை கழிவுகளை, எம்.எம்.சி., நிர்வாகம் முறையாக அகற்றுவது இல்லை என, குற்றச்சாட்டும் உள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி, குப்பையில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.