தி.நகர்-தி.நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தால், பரபரப்பு ஏற்பட்டது.சென்னையில் வர்த்தக மையமான தி.நகர், ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதும். எப்போது பரபரப்பாக காட்சியளிக்கும் ரங்கநாதன் தெருவில், நேற்று காலை 11:00 மணிக்கு, ஓட்டல் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், கண்ணாடி மற்றும் பர்னிச்சர் பொருட்கள், முழுமையாக எரிந்து நாசமாயின. இதனால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.தகவல் அறிந்து வந்த, தி.நகர் தீயணைப்பு வீரர்கள், கடையில் இருந்த ஆட்களை வெளியேற்றி, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.முதற்கட்ட விசாரணையில், மின்சார அடுப்பில் இருந்து மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.இது குறித்து, தி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.