சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதையடுத்து தமிழக அரசு சில தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது.ஊரடங்கு விதிமீறுவோரை கண்காணிக்க, ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியிலும் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். இதற்காக, தற்காலிக பந்தல்கள் அமைத்து உள்ளனர்.ஒரு சில இடங்களில், இரண்டு சாலை சந்திப்பு வளைவுகளில் சாலையை ஆக்கிரமித்து பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக சி.பி.ராமசாமி சாலை -- டாக்டர் ரங்கா சாலை சந்திப்பில், சாலையை ஆக்கிரமித்து பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே, விபத்து ஏற்படாதபடி, மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.