திருவொற்றியூர்--சென்னை, எண்ணுார், சுனாமி குடியிருப்பு, 81வது பிளாக்கைச் சேர்ந்தவர் ஆண்டனி, 19.இவருக்கு, தாங்கல், திருவொற்றியூர் நெடுஞ்சாலையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.பின்னர், அந்த சிறுமியை இவர் ஆசை வார்த்தை கூறி, காதலிக்க ஆரம்பித்தார். கடந்த 17ம் தேதி சிறுமி காணாமல் போனார்.இது குறித்து, திருவொற்றியூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணையில், ஆண்டனி, அந்த சிறுமியை அழைத்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து போலீசார் ஆண்டனியிடம் இருந்து சிறுமியை மீட்டனர். வீட்டிலேயே வைத்து, தாயின் முன் ஆண்டனி சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியது தெரியவந்தது.இதையடுத்து, ஆண்டனியை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.