சென்னையில் 13 சந்திப்புகளில் நெரிசலுக்கு... தீர்வு! ; ரூ.18.85 கோடியில் மேம்பாட்டு பணி துவக்கம்; சுமுக பயணத்திற்கு நெடுஞ்சாலைத் துறை திட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2022
03:40

சென்னையில் ௧௩ சாலை சந்திப்புகளில் விபத்து மற்றும் நெரிசலைத் தவிர்க்க, ௧௮.௮௫ கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் மூலம் விபத்து, நெரிசலைத் தடுத்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள முடியும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.சென்னையில் வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், 10 சதவீதம் வரை வாகன எண்ணிக்கை அதிகரிக்கிறது.தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு வரை, மொத்தம் 3.03 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில், இருசக்கர வாகனங்கள் மட்டும் 2.56 கோடி. அதே வேளையில், பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்கவும், நகரங்களில் நெரிசல், மாசு குறைக்க, மெட்ரோ ரயில் போன்ற திட்டங்கள் மக்களிடம் ஊக்குவிக்கப்படுகின்றன.கொரோனா பாதிப்புக்கு பின், பொது போக்குவரத்தை தவிர்த்து பைக், கார் பயன்பாடு அதிகரித்துள்ளது. சென்னை புறநகர் பகுதியில், புதிய தொழிற்சாலைகள் திறப்பு, வேலைவாய்ப்பு அதிகரிப்பு உள்ளிட்டவையும் வாகனங்கள் அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கிறது.தனி நபர் வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நேரத்தில், சிக்னல் மதிக்காமை, அதிவேகம், அஜாக்கிரதை போன்ற காரணத்தால், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.எனவே, வாகன நெரிசலில் விபத்தை தடுத்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள, மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை, சாலை மேம்பாட்டு நிறுவனம் மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.சென்னையில் அதிகரித்து வரும் தனி நபர் வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப, சாலை விரிவாக்கம் செய்ய இட வசதி இல்லை. மாறாக, முக்கிய சிக்னல் சந்திப்புகளை விபத்தில்லா வகையில் மேம்படுத்துவதே தீர்வாக அமையும்.இதன் அடிப்படையில், சாலை மேம்பாடு நடவடிக்கை தொடர்பாக, தமிழக அரசுக்கு, மத்திய தரை வழி போக்குவரத்து கழகம் மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரகம் வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.இதன்படி, வாகனங்களின் தன்மை மற்றும் வேகத்தின் அளவீட்டை, பி.சி.யூ., 'பேசஞ்சர் கார் யூனிட்' முறையில் கணக்கிட்டு, சென்னையில் 50 சந்திப்புகளை மேம்படுத்தப்பட வேண்டும் என கூறி உள்ளது.இதன்படி, இறப்பு, சிறுகாயம், கொடுங்காயம் என, மூன்று ஆண்டில், 10 சம்பவங்கள் ஒரே இடத்தில் நடந்தால், அங்கு மேம்பாடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் அடிப்படையில், சாலை சந்திப்பு மேம்பாடு திட்டத்திற்கு, நெடுஞ்சாலைத் துறை 150 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதில், சென்னை கோட்டத்திற்கு, 18.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.இந்த நிதியில், முதற்கட்டமாக, 13 முக்கிய சிக்னல் சந்திப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதை தொடர்ந்து, இதர சந்திப்புகளில் பணி தொடர உள்ளதாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறினர்.இதேபோல், மாநகராட்சி, தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் சாலை மேம்பாட்டு நிறுவனம் ஆகிய துறைகள், சென்னையில் முக்கிய சாலை சந்திப்புகளில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளன.சென்னையில் சாலை விரிவாக்கம் செய்ய இட வசதி இல்லை. இதனால், அடிக்கடி விபத்து, நெரிசல் ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்து, சாலை சந்திப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதன் வாயிலாக, சிக்னல்களில் நடக்கும் விபத்துகள் தடுக்கப்படும். சிக்னலில் காத்திருக்கும் நேரம் குறையும். பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள முடியும். பாதசாரிகளும், எளிதாக சிக்னல்களை கடந்து செல்ல முடியும்.நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்சந்திப்பு மேம்பாடு எதற்கு?சாலை சந்திப்பு மேம்பாடு செய்யப்படுவதால் ஏற்படும் நன்மைகள்: வாகனங்களின் வேகத்தை சீராக்க முடியும் சிக்னலில் காத்திருக்கும் நேரம் குறையும் பாதசாரிகள் எளிதாக சாலையை கடந்து செல்ல முடியும் விபத்துகள் தடுக்கப்படும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவது தடுக்கப்படும், கண்காணிக்கப்படும்.தேசிய நெடுஞ்சாலை: இரும்புலியூர் முதல் கோயம்பேடு வரை உள்ள சாலை, 25 கி.மீ., நீளம் உடையது. இந்த சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரிப்பில் உள்ளது. ரோகினி திரையரங்கு சந்திப்பு, மதுரவாயல் புறவழிச் சாலை சந்திப்பு, மஞ்சம்பாக்கம் சந்திப்பு, திருநீர்மலை சந்திப்பு ஆகிய பகுதிகளில், அடிக்கடி விபத்து ஏற்படும்.மாநில நெடுஞ்சாலை: சென்ட்ரல் முத்துசாமி ரயில்வே பாலம் முதல், இரும்புலியூர் வரை உள்ள ஆறு வழிச் சாலை, 28 கி.மீ., நீளம் மற்றும் இடத்தை பொறுத்து, 70 முதல் 200 அடி அகலம் உடையது.

இதில், ஓமந்துாரார் சிக்னல், வாலாஜா சாலை சிக்னல், ஸ்பென்சர் சிக்னல், ஜெமினி மேம்பாலம் சிக்னல், ஜோன்ஸ் சாலை சிக்னல், சின்னமலை சந்திப்பு, எம்.கே.என்.,சாலை சந்திப்பு, கத்திப்பாரா அணுகுசாலைகள், ஓ.டி.எ., சந்திப்பு, விமான நிலையம் சந்திப்பு, பல்லாவரம்- - திருநீர்மலை சாலை சந்திப்பு, குரேம்பேட்டை சந்திப்பு, சானிடோரியம் சந்திப்பு, தாம்பரம் ஆகிய சந்திப்புகளில், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன முத்துசாமி மேம்பாலம் முதல் கோயம்பேடு வரை உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை, 10 கி.மீ., நீளம் உடையது. இதில், காந்தி இர்வின் பாலம் சந்திப்பு, ராஜா அண்ணாமலை சாலை, ஈகா திரையரங்கம் சந்திப்பு, ஸ்கைவாக் சந்திப்பு, பாஞ்சாலிஅம்மன் கோவில் சந்திப்புகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன  கிண்டி கத்திப்பாரா முதல் மாதவரம் ரவுண்டானா வரை உள்ள நெடுஞ்சாலை 20 கி.மீ., நீளம் உடையது. இதில், உதயம் திரை அரங்கு சந்திப்பு, கோடம்பாக்கம் சாலை சந்திப்பு, விநாயகபுரம் சிக்னல் சந்திப்பு, பாடி மேம்பாலம் சந்திப்பு, செந்தில்நகர் சந்திப்பு, மாதவரம் ரவுண்டானா ஆகிய இடங்கள், அடிக்கடி விபத்து நடைபெறும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன

 மத்திய கைலாஷ் சந்திப்பு முதல் சிறுசேரி வரை உள்ள ஓ.எம்.ஆர்., 20 கி.மீ., நீளம் உடையது. சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரிப்பில் இந்த சாலை உள்ளது. இங்கு, முன்பை விட விபத்துக்கள் குறைந்துள்ளன. மூன்று இடங்கள், அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாக அடையாளம் காணப்பட்டு உள்ளது.குறிப்பாக, சாலை மைய தடுப்பில் ஏறி குதிக்கும் பாதசாரிகளால் அதிக விபத்துகள் நடக்கின்றன. இதனால், சாலை மைய தடுப்பில் இரும்பு தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதே சாலை மைய பகுதியில், மெட்ரோ ரயில் பாதை வருவதால், அந்த பணி முடிந்தபின், இரும்பு தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- -நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
20-ஜன-202217:23:42 IST Report Abuse
r.sundaram சென்னையை சுற்றியே பலதொழிற்ச்சலைகள் இருக்கின்றன, மேலும் மேலும் சென்னையை சுற்றியே தொழிற்ச்சலைகளுக்கு அனுமதியும் கொடுக்கப்படுகிறது. இதை தவிர்த்தாலே சென்னையின் பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும். தமிழகத்தின் தென்மாவட்டங்கள் வேலையில்லா திண்டாட்டத்தால் தவிக்கின்றன. அதனை படித்த பிள்ளைகளும் சென்னைக்கே வருகிறார்கள். இதை விடுத்து தென் மாவட்டங்களில் சில தொழிற்ச்சலைகளையாவது ஆரம்பித்தால், சென்னையின் மக்கள் நெருக்கம் குறையும், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறையும், இந்தம்மாதிரி இன்னும் பல விஷயங்கள் குறையும். ஆதலால் அறிவார்ந்தவர்கள் அரசுக்கு இந்த ஆலோசனைகளை வழங்க்க வேண்டும்.
Rate this:
Cancel
20-ஜன-202217:01:59 IST Report Abuse
kulandai kannan கட்டு மர வழியில் ஆட்டைய போடுவோம்.
Rate this:
Cancel
20-ஜன-202211:18:49 IST Report Abuse
ராஜா தாம்பரம் முடிச்சூர் பாலமே திமுக ஆட்சியின் பலமான கட்டுமானங்களுக்கு சாட்சி. ஏற்கனவே எடப்படியர் கட்டத்துவங்கிய பாலங்களுக்கும் சேர்த்து ஸ்டிக்கர் ரெடி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X