அடையாறு மண்டலம், 180வது வார்டு, தரமணி, களிக்குன்றம் பிரதான சாலையில், குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரதான குழாயில் இருந்து, தெருக்களுக்கு சிறிய குழாய் பாதித்து, அதன் வழியாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.பிரதான குழாய் சேதமடைந்து, ஒரு வாரமாக குடிநீர் வீணாக சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால், வீடுகளுக்கான குடிநீர் வினியோகமும் தடைப்பட்டுள்ளது.வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் வீணாவதை தடுக்க, அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.