வேளச்சேரி--அடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மற்றும் அம்பேத்கர் நகர் மைய பகுதியில், நேருநகர் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில், கழிவுநீர் வெளியேற்று நிலையத்தை ஒட்டி, 16 கம்பங்களில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. நவம்பர் மாதம் மழையின்போது, கேபிள் பழுதாகி எரியவில்லை.மழை நின்றபின், பழுதை சரி செய்து தெருவிளக்குகள் எரிய வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, மாநகராட்சி மின்துறை ஊழியர்கள், கேபிளை சரி செய்து, தெருவிளக்குகளை எரிய வைத்தனர்.