ஆதம்பாக்கம்-ஆதம்பாக்கத்தில், வீட்டின் கதவு பூட்டை உடைத்து, நகைகளை திடியவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவானவரை தேடி வருகின்றனர்.ஆதம்பாக்கம், மகாலட்சுமி நகர், 11வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர், 27. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான விழுப்புரம் சென்று சென்னை திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்ற பார்த்தபோது, பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு, தங்க கம்மல் ஜோடி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தன.இது குறித்து விசாரித்த ஆதம்பாக்கம் போலீசார், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மாதவன், 23, என்பவனை கைது செய்து, நகையை மீட்டனர். தலைமறைவாக உள்ள வினோத், ௧௯, என்பவனை தேடி வருகின்றனர்.