அண்ணா நகர்,---நகை வாங்கி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மேற்கு செனாய் நகரைச் சேர்ந்தவர் சபிதா, 65. இவர், அண்ணா நகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தார்.அதில், ரஞ்சித்குமார் என்பவர் சில மாதங்களுக்கு முன், தன்னிடமிருந்து, 10 சவரன் நகையை வாங்கி, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள நகை கடையில், 2.௭௫ லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்து, அதற்கான ரசீதை 'வாட்ஸ் அப்'பில் அனுப்பினார்.பின், தற்போது வரை நகையை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.புகாரின்படி, அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.நகையை வாங்கி ஏமாற்றியதாக கூறப்படும் நபர், அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர் என கூறப்படுகிறது.