பிரையாம்பத்து-'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட பிரையாம்பத்து பகுதியில் சாலையில் வழிந்தோடிய கழிவு நீர் அகற்றப்பட்டு பிளீச்சிங் பவுடர் துாவப்பட்டது.திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட பிரையாம்பத்து பகுதியில் உள்ள அரசு பள்ளியைச் சுற்றியுள்ள தெருக்களில் 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், கழிவு நீர் கால்வாய் முறையான பராமரிப்பில்லாததால், சாலையில் கழிவு நீர் தேங்கி சேறும், சகதியமாக காட்சியளித்தால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்தான செய்தி வெளியானதையடுத்து, குடியிருப்பு பகுதியில் தேங்கியிருந்த கழிவு நீரை அகற்றி நோய் பரவால் தடுக்கும் வகையில் பிளீச்சிங் பவுடர் துாவினர். மேலும், கழிவு நீர் கால்வாயை முறையாக சீரமைக்கவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.