கம்பீரமான யாக சாலையும், கவின்மிகு உற்சவர் சன்னிதியும்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

20 ஜன
2022
08:19
பதிவு செய்த நாள்
ஜன 20,2022 04:19

சென்னை வடபழநியில் உள்ள, வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 23ந்தேதி தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படி நடைபெற இருக்கிறது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவிலில் பல புதிய விஷயங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் யாகசாலையும், உற்சவர் சன்னிதியும் முக்கியமானதாகும்.ஹிந்து மதத்தில் யாகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. யாகம் என்பது ஒரு சிறப்பு செயல்முறை. ஹிந்து மத வேதங்களில், சமஸ்கிருத காவியங்களில், யாகத்தின் முக்கியத்துவம் பல இடங்களில் சொல்லப்படுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு விருப்பமும், யாகம் செய்வது என்ற நேர்மறையான வழியின் வாயிலாக நிறைவேற்றப்படுகிறது.யாகம் வேதங்களில் சிறந்த கர்மாவாகும். இதனால்தான், சிறப்பு மிக்க யாகத்தை வீட்டிலோ, கோவிலிலோ அவரவர் சக்திக்கு ஏற்ப செய்து வருகின்றனர். வீட்டில் குழந்தைக்கு ஆயுள் யாகம் முதல், மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற்று தேர்வு பெற வேண்டும் என்றும் கோவிலில் கூட்டாக யாகம் செய்யப்படுகிறது. இது போன்ற யாகங்கள் அவ்வப்போது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.கோவிலில் யாகம் நடத்துவது, மிகச்சிறந்த செயலாகும். இதற்காக வடபழநி ஆண்டவர் கோவிலில் ஒரு யாகசாலை மண்டபம் இருந்தது.பழமையான செங்கல் கட்டடத்தில், இருந்த இந்த யாகசாலை மண்டபம் முழுமையாக அகற்றப்பட்டு, தற்போது கருங்கல்லினால் கம்பீரமான முறையில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.பொலிவான தோற்றத்தில் அமைந்துள்ள இந்த புதிய மண்டபத்தில் ஈஸ்வரனும் ஈஸ்வரியும், தட்சிணேஸ்வரர் தட்சிணேஸ்வரியாக இருந்து, யாகம் நடத்துபவர்களுக்கு அருளாசி புரியவிருக்கின்றனர்.யாகம் நடத்துவது என்பது, பெரும் பணம் படைத்தவர்களால் மட்டுமே முடியும் என்ற கருத்தை மாற்றி, எளியவர்களும் இங்கு யாகம் நடத்தலாம் என்பதற்கேற்ப, கோவில் நிர்வாகம் பல திட்டங்களை வகுத்துள்ளது.பக்தர்கள் தாங்கள் நினைத்தது நடக்க, விரும்பிய பட்ஜெட்டில் இங்கு யாகம் நடத்தலாம் என்பது, இங்குள்ள யாகசாலையின் சிறப்பாகும்.எப்போதாவது யாகம் நடந்தது என்ற சொல் போய், இனி எப்போதும் இங்கு யாகம் நடக்கப் போகிறது, கோவிலுக்குள் மந்திர உச்சாடனைகள் கேட்டுக் கொண்டே இருக்கப் போகிறது என்பது, உள்ளபடியே மனதிற்கு மனநிறைவு தரும் விஷயம்.இதே போல, மூலவர் சன்னிதிக்கு பின் பக்தர்கள் திரளாக நின்று தரிசனம் செய்வது, உற்சவர் சன்னிதியில் தான். இதற்கு முன், உற்சவர் சன்னிதி என்று எதுவும் இல்லை. ஒரு பழைய மயில் வாகணத்தில் முருகன் அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்தார். இப்போது உற்சவர் சன்னிதிக்கென தனி மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. முழுக்க கருங்கல்லால், தேர் வடிவில், மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல் தேர் மண்டபத்தை, இரண்டு யானைகள் சங்கிலி கட்டி இழுப்பது போல அமைந்திருப்பது, இன்னும் சிறப்பாகும்.இந்த கவின்மிகு கல்தேர் மண்டபத்தில் இருந்தபடி, இனி உற்சவரான வடபழநி யாண்டவர், அருளாசி வழங்கவிருக்கிறார்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X