50 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பழுது!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2022
04:22

திருவள்ளூர் மாவட்டத்தில், நெடுஞ்சாலைகளில், விதிமீறி செல்லும் வாகன ஓட்டிகளால் ஏற்படும், விபத்து சம்பவங்கள் மற்றும் வழிப்பறி திருட்டு குற்றங்களை குறைக்கும் வகையில், போலீசார் சார்பில் பொருத்தப்பட்டுள்ள, கண்காணிப்பு கேமராக்களில், 50 சதவீதம் பழுதாகி உள்ளது.இந்த கேமராக்களை கணக்கெடுத்து, சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், மாநில நெடுஞ்சாலை, 489 கி.மீட்டர், மாவட்ட முக்கிய சாலை, 277 கி.மீட்டர், இதர மாவட்ட சாலை 879 கி.மீட்டர், சர்க்கரை ஆலை நிர்வாகத்தில், 13 கி.மீட்டர் என, 1,655 கி.மீட்டர் துாரத்திற்கு சாலை வசதி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில், 100 கி.மீட்டர் துாரம் உள்ளது.இதில், தேசிய நெடுஞ்சாலையான, திருவள்ளூர் -- திருத்தணி, செங்குன்றம் -- ஆரம்பாக்கம் சாலையிலும், திருவள்ளூர் - - பூந்தமல்லி, திருவள்ளூர் -- செங்குன்றம் மாநில நெடுஞ்சாலைகளில், அதிகளவில் சாலை விபத்துகள் நேரிடுகின்றன.அதிக வேகமே காரணம்:இச்சாலைகளில், நாள் ஒன்றுக்கு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி, பஸ், வேன், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள், அடிக்கடி விபத்துகளில் சிக்கி உயிர் பலியும், காயமும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது.இந்த வகையில், ஆண்டுதோறும், 1,000க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் விபத்துகளில் சிக்கி, 300 - 450 பேர் வரை பலியாக வருகின்றனர். தொடரும் சாலை விபத்துகள் மற்றும் உயிர் பலிக்கு காரணம், மோசமான, அபாயகர வளைவுகள் கொண்ட சாலை தான் என, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.அதே சமயம், சாலை விதியை மதிக்காமல், காரில் செல்வோர், 'சீட் பெல்ட்' அணியாமலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலை கவசம் அணிந்து செல்லாமலும், பயணிப்பதுமே முக்கிய காரணம் என, போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர்.இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில், உள்ள ஐந்து உட்கோட்டங்களில் கண்காணிப்பு கேமரா எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. சாலைகளில் போக்குவரத்தினை கண்காணிக்க, 2019 - 20ல், ஏற்கனவே இருந்த, 1,060 கேமராக்களுடன், முக்கிய சாலை சந்திப்புகளில், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 154 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் என, மொத்தம், 1,214 கேமராக்கள் போலீசார் சார்பில் பொருத்தப்பட்டன.ரூ.6.53 கோடி அபராதம்இதன் மூலம் கடந்தாண்டு மட்டும், ஐந்து லட்சத்து, 41 ஆயிரத்து, 247 வழக்குகள் பதியப்பட்டு, அபராத தொகையாக, ஆறு கோடியே, 53 லட்சத்து, 85 ஆயிரத்து, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில், 'குடி'போதையில் வாகனம் ஓட்டியதாக, 832 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.இதன் மூலம், இரவிலும், துல்லியமாக படம் பிடித்து, விதிமீறல் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் சிக்கிக் கொள்வர். இதன் மூலம், போலீசார் பிடியில் இருந்து, குற்றம் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது, என, மாவட்ட காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.சேதம்திருவள்ளூர் மாவட்டத்தில், ஐந்து உட்கோட்டங்களில், போக்குவரத்து மற்றும் திருட்டு சம்பவங்கள் கண்காணிக்க வங்கி, கடைகள், குடியிருப்பு பகுதிகளை கண்காணிக்க, 6,000 கேமராக்கள் தனியார் நிறுவன பங்களிப்புடன் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது, நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்டு உள்ள கேமராக்கள் பல, சேதமடைந்து விட்டன.திருவள்ளூர் நகரில், காமராஜர் சாலை சந்திப்பு, நேதாஜி சாலை - எம்.ஜி.ஆர்., சிலை அருகில் என, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கேமராக்கள் பழுதடைந்து, தரையை நோக்கி, திரும்பி தொங்குகிறது. இதனால், போக்குவரத்து விதி மீறல், விபத்து உள்ளிட்டவற்றை, கேமராவில் பதிவு செய்ய இயலவில்லை.தற்போது, மாவட்டத்தில், 1,214 கேமராக்களில், 570 கேமராக்கள் பழுதாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த கேமராக்களை கண்டறிந்து சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.திட்ட மதிப்பீடுதிருத்தணி நகர எல்லைகளாக பொன்பாடி சோதனைச்சாவடி, நாகலாபுரம் - வேலஞ்சேரி கூட்டுச்சாலை, சரஸ்வதி நகர், பொதட்டூர்பேட்டை மற்றும் திருத்தணி நகர் முழுதும் மொத்தம், 60 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது, 32 கேமராக்கள் பழுதாகியுள்ளன. பழுதான கேமரக்காள் கணக்கெடுத்து திட்ட மதிப்பீடு தயார் செய்வதற்கு, காஞ்சிபுரம் பகுதியில் தனியார் நிறுவனத்தை வரவழைத்து உள்ளோம்.

ஒரிரு நாளில் பழுதாகியுள்ள கேமராக்கள் சீரமைத்து பொருத்தப்படும்.எஸ்.ரமேஷ்,காவல் ஆய்வாளர், திருத்தணி.கூடுதல் 1,000 கேமராக்கள்மாவட்டம் முழுதும் பழுதாகி உள்ள கண்காணிப்பு கேமராக்களை கண்டறிந்து, சரி செய்வதற்கு சென்னை, வேலுார் மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து தனியார் நிறுவனம் மூலம் ஆட்களை வரவழைத்து, அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம். முதலில் பழுதாகி உள்ள கேமராக்களை சரி செய்த பின், கூடுதலாக, 1,000 கேமராக்கள் பொருத்துவதற்கு திட்டமிட்டு உள்ளோம்.காவல் உயரதிகாரி, திருவள்ளூர்.

- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜன-202218:17:57 IST Report Abuse
அப்புசாமி ஸ்காட்லாந்து யார்டு போலீசாரை யார் விசாரிக்கறது? எல்லோரும் ஆட்டை மயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X