சிவகங்கை : சிவகங்கை அரண்மனை வாசலில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கண்ணகி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் சிறப்பு வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாகனத்திற்கு அனுமதி மறுத்ததை கண்டித்தும், குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் இடம் பெற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். நகர் செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் மருது, கங்கை சேகரன், சகாயம், கோபால், சாத்தையா, சந்திரன் பங்கேற்றனர்.