தேனி : மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்றுதேனியில் கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்தது. எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்ரே, டி.ஆர்.ஓ., சுப்பிரமணியன், பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப், உள்பட பலர் பங்கேற்றனர். விழா நடைபெறும் மைதானத்தை தயார் செய்தல், பங்கேற்கும் சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகளுகு மரியாதை செலுத்துதல், போலீஸ், தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதை, சிறப்பாக பணியாற்றி அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்று, பரிசு வழங்கல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.