சிவகங்கையில் பஸ் இன்றி அலைமோதிய கூட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2022
06:03

சிவகங்கை : சிவகங்கையில் நேற்று பஸ்ஸிற்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.



நேற்று காலை அலுவலகம், வேலை, பிற பணிகளுக்காக வெளியூர் செல்வோர் பஸ் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்தனர். குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டதால் அதிக பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றனர். விடுமுறை காலங்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பஸ் இயக்கப்படுவது வழக்கம். சிறப்பு பஸ்களாக பெரும்பாலும் புறநகர் பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

இதனால் வழக்கமான பணிகளுக்கு செல்லும் மக்கள் பஸ்ஸிற்காக காத்திருப்பதும், கூட்ட நெரிசலில் பயணிப்பதும் தொடர் கதையாகவே உள்ளது. விடுமுறை காலம் என்றாலே பஸ்ஸில் பயணிப்பது பெரும் போராட்டம் தான் என்கின்றனர் பயணிகள்.அரசு போக்குவரத்து கழக சிவகங்கை கோட்ட மேலாளர் அழகர்சாமி கூறுகையில், சிறப்பு பஸ்களாக பெரும்பாலும் ஸ்பேர் பஸ்கள் தான் இயக்கப்படுகிறது. பொங்கல் சிறப்பு பஸ்கள் இரண்டு நாட்களாக இயக்கப்படுவதால் பெரும்பாலான பஸ்கள் திரும்ப வந்துவிட்டன. ரெகுலர் ரூட் பஸ்கள் குறைக்கப்படவில்லை. நேற்று வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகரித்திருந்தது. கூடுதல் பஸ்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X