போடி : போடி -- தேனி செல்லும் மெயின் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.தமிழக - கேரளாவை இணைக்கும் வழித்தடமாக போடி அமைந்துள்ளது. போடியிலிருந்து தேனி, - மூணாறு செல்லும் ரோடு வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. போடி முந்தல் ரோட்டிலிருந்து அணைக்கரைப்பட்டி மெயின் ரோடு வரை ரோட்டின் மையப் பகுதியில் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளன. இரவில் ரோட்டில் உள்ள பள்ளம் தெரியாததால் வாகனங்களில் செல்வோர்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி உயிர் பலியாகும் நிலை தொடர்கிறது. சேதமடைந்த ரோட்டை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.