எரியோடு : குஜிலியம்பாறை தாலுகா மேற்கு வடுகம்பாடியை சேர்ந்தவர் கலைச்செல்வன் 32. இவர் குஜிலியம்பாறை ஒன்றிய அ.தி.மு.க., கவுன்சிலர் வீரமணி வீட்டின் அருகில் வசிக்கிறார். லாரி டிரைவரான கலைச்செல்வனிடம், அரசு பஸ் டிரைவர் பணி வாங்கி தருவதாக வீரமணி பேரம் பேசியுள்ளார்.
இதற்காக பலமுறை ரூ.6 லட்சம் பணம் அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், வீரமணி தரப்பினர் வாங்கியுள்ளனர்.அதற்குள் ஆட்சி மாறியதால் இருவரிடமும் பணத்தை திரும்ப தாருங்கள் என கடந்த ஜன.10ல் கலைச்செல்வன் கேட்டுள்ளார். 'பணத்தை தர முடியாது, பணம் கேட்டால் நடப்பதே வேறு' என இருவரும் மிரட்டியதாக கலைச்செல்வன் எரியோடு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து மலர்வண்ணன், வீரமணி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.