திண்டுக்கல் : 'வணிகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த கோரி', உள்ளாட்சி துறை அமைச்சர் நேருவுக்கு திண்டுக்கல் தொழில் வர்த்தகர் சங்கத்தினர் கடிதம் அனுப்பினர்.மாவட்ட தலைவர் கிருபாகரன் தலைமையில் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது:
மாநகராட்சி, நகராட்சி கடைகளின் வாடகை உயர்வு, நிலுவை வாடகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக அந்தந்த மாவட்ட வணிகர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனாவால் மாநகராட்சி கடை வணிகர்களின் பொருளாதாரம் மிகவும் பாதித்துள்ளது. ஆலோசனை கூட்டம் நடத்தி வணிகர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும், என்றனர்.