காரியாபட்டி : காரியாபட்டி பேரூராட்சியில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் பேவர் பிளாக் ரோடு, ரூ. 50 லட்சம் மதிப்பில் சாக்கடை அமைக்க பூமி பூஜை நடந்தது. இதை தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். செயல் அலுவலர் மணிகண்டன், ஒன்றிய தி.மு.க., செயலாளர்கள் கண்ணன், செல்லம், நகர் செயலாளர் செந்தில் , முன்னாள் நகர செயலாளர் தங்கபாண்டியன், முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ் , மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், மாவட்ட பொருளாளர் வேல்சாமி, சங்கரபாண்டியன் கலந்து கொண்டனர்.