நீர்வரத்து கால்வாயில் பாதாளசாக்கடை கழிவு நீர் ; வேலியை ஆடு மேய்ந்த கதையான நகராட்சியின் செயல்பாடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2022
07:21


விருதுநகர் : விருதுநகர் பாண்டியன்நகரில் வேலியை ஆடு மேய்ந்த கதையாக நகராட்சி நிர்வாகத்தினர் பாதாளசாக்கடை மேன்ஹோல் கழிவுநீரை நீர்வரத்து கால்வாயில் விடுவதால் பெரும் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.



விருதுநகர் பாண்டியன் நகர், ரோசல்பட்டி வழியாக நீர்வரத்து கால்வாய் செல்கிறது. இதன் குறுக்கே உள்ள ரோட்டில் பாதாளசாக்கடை திட்டத்தின் நகர் கிழக்கு பகுதி கடைசி மேன்ஹோல் உள்ளது. முன்பு இதே ரோட்டின் துவக்கத்தில் உள்ள தபால் நிலையம் முன்பு நீண்ட காலமாக மேன்ஹோலில் இருந்து கழிவுநீர் வெளியேறிய நிலையில், தற்போதைய கமிஷனர் துரித நடவடிக்கையால் சரி செய்யப்பட்டது. இந்நிலையில் கடைசி மேன்ஹோல் வழியாக கழிவு நீர் வெளியேறியது. இதை சரி செய்த நகராட்சி பணியாளர்கள் பாதாளசாக்கடை கழிவுநீரை ரோட்டின் அடிப்பகுதி வழியாக அருகே செல்லும் நீர்வரத்து கால்வாய் செல்லும் வகையில் அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

இதற்காக அருகே உள்ள நகராட்சியின் பழைய மோட்டார் ரூமின் அடிப்பகுதி சுவற்றில் ஓட்டை போட்டு அங்கிருந்து பைப் வழியாக நீர்வரத்து ஓடைக்குள் கழிவுநீரை கலக்க செய்துள்ளனர். இவர்களின் இச்செயல் 'ஆடு வேலியை மேய்ந்த கதை'யாகி உள்ளது. ஏற்கனவே இப்பகுதி மக்களால் குப்பை கிடங்காகவும், இறைச்சி கழிவுகள் கொட்டுமிடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த கால்வாயானது தற்போது பாதாள சாக்கடை கழிவுநீரையும் சுமந்து செல்கிறது. நகராட்சி நிர்வாகத்தின் இந்த அலட்சிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்வரத்து கால்வாயை கழிவுநீர் கலக்க செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறையும் முன் வர வேண்டும்.

இதை தடுக்க வேண்டும்சுரேஷ், தனியார் ஊழியர், விருதுநகர்: கழிவுநீரானது தொடர்ந்து வெளியேறி வருகிறது. நீர்வரத்து ஓடையில் இதற்கு முன்பு வரை குப்பை கொட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது கழிவுநீரையும் கலக்க செய்துள்ளனர். இங்கு தடுப்புச்சுவர் அமைத்து வரத்து கால்வாயை பாதுகாக்க வேண்டும்.

கழிவுநீர் கலப்பதையும் தடுக்க வேண்டும்.சுகாதாரக் கேடால் அவதிசந்தனபாண்டி, டீக்கடை உரிமையாளர், பாண்டியன் நகர்: சுகாதாரக் கேடால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறோம். நகர் பகுதியின் எல்லா கழிவுநீரும் இங்குதான் வெளியேறுவது போல் தொடர்ந்து கழிவுநீர் செல்கிறது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி நிர்வாகம் வரத்து கால்வாயை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடவடிக்கை எடுக்கப்படும்சையது முஸ்தபா கமால், நகராட்சி கமிஷனர், விருதுநகர்: விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X