கந்துவட்டி கொடுமை: முதுகுளத்துார் விவசாயி தற்கொலை | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
கந்துவட்டி கொடுமை: முதுகுளத்துார் விவசாயி தற்கொலை
Added : ஜன 20, 2022 | |
Advertisement
 
Latest district News

முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே விவசாயி தங்கவேல் 58, கந்து வட்டி கொடுமையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

முதுகுளத்துார் அருகே மேலச்சிறுபோது கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். தி.மு.க., நிர்வாகியான இவர் கந்துவட்டிக்கொடுமையால் மேலச்சிறுபோது- எஸ்.குளம் செல்லும் சாலை கண்மாய் கரை அருகே பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நடந்தது என்ன ?

தங்கவேல் அவரது நண்பருக்கு அதேகிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் வட்டிக்கு ரூ.3 லட்சம் வாங்கி கொடுத்துள்ளார். பின் நண்பர் தலைமறைவானதால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவே ரூ.3.50 லட்சத்துக்கும் மேல் கடன் தந்தவருக்கு வட்டி மட்டும் கட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ரூ.6 லட்சம் வாங்கியதாக நோட்டில் எழுதி வாங்கி இன்னும் அதிகமாக வட்டி கட்ட வேண்டும். இல்லையெனில் உனது குடும்பத்திடம் சொல்லி அசிங்கப்படுத்துவேன் என தொந்தரவு செய்துள்ளனர்.

இதனால் மன உளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், இதுகுறித்து தமிழக முதல்வர், போக்குவரத்துதுறை அமைச்சர், போலீசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தற்கொலைக்கு முன் தங்கவேல் பேசிய வீடியோ பரவி வருகிறது. இளஞ்செம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X