உடுமலை:உடுமலை நகராட்சிக்குட்பட்ட ருத்ரப்பநகர், ராமசாமி நகர் மற்றும் சுற்றுப்பகுதி குடியிருப்பு மக்கள், தங்கள் பகுதியில், நுாலகம் அமைக்க நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, கடந்த, 2018-19ல், பொள்ளாச்சி எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில், 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிகள் அந்தாண்டே நிறைவு பெற்றது. ஆனால், இதுவரை நுாலகக்கட்டடம் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. திறக்கப்படாமலேயே கட்டடம் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, உடுமலை நகராட்சி நிர்வாகம், நுாலகத்துக்கான புத்தகங்களை ஒதுக்கீடு செய்து, கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.