புதிதாக கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
புதிதாக கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு
Added : ஜன 20, 2022 | |
Advertisement
 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பத்து நாட்களுக்குள் ஆயிரம் பேரை நெருங்கிவிட்டதால் மக்கள் விழிப்புடன் விதிமுறைகளை கடைபிடிப்பது கட்டாயமாகிறது.



மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 2021 டிச., இறுதி வரை ஒன்று அல்லது இரண்டு ஆக இருந்தது. ஒற்றை இலக்கத்தில் இருந்த இந்த பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. படிப்படியாக உயர்ந்து பத்து நாட்களுக்குள் மிகவும் அதிகமாக நேற்று முன்தினம் 225 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரோனா பாதிப்பு துவங்கியது முதல் இதுவரை 22 ஆயிரத்து 32 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 20 ஆயிரத்து 767 பேர் குணமடைந்தனர். 362 பேர் பலியாகினர். நேற்று முன்தினம் அதிகபட்சமாக 225 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 104 பேர் குணமடைந்தனர்.

நேற்று முன்தினம் வரை 903 பேர் சிகிச்சையில் உள்ளனர். பெரும்பாலும் அதிக பாதிப்பு இல்லாததால் தொற்று ஏற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் தற்போது 11 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் விழிப்புடன் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லக்கூடாது. பொது இடங்களில் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், என சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.-----

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X