ராமேஸ்வரம் படகு மீது இலங்கை கப்பல் மோதல்:  | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
ராமேஸ்வரம் படகு மீது இலங்கை கப்பல் மோதல்: 
Added : ஜன 20, 2022 | |
Advertisement
 

ராமநாதபுரம் : ராமேஸ்வரம் மீனவர்களின் படகின் மீது, இலங்கை கடற்படை ரோந்துகப்பல் மோதியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம் என ராமநாதபுரம்எம்.பி., நவாஸ்கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) கூறியுள்ளார்.



அவர் கூறியுள்ளதாவது: கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தராமநாதபுரம் மாவட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் படகு மீது இலங்கைகடற்படை ரோந்து கப்பல் மோதி விபத்து நடந்துள்ளது. இதில் 7 மீனவர்கள்கடலில் சிக்கி சக மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இலங்கைகடற்படையின் இத்தகைய செயல் கடும் கண்டனத்திற்குரியது.

நம்நாட்டு மீனவர்களிடம் மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு நடந்துகொள்ள மத்தியரசு அறிவுறுத்த வேண்டும். இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறுவதைதடுக்க மத்திய அரசு வலிமையான கண்டனத்தை அழுத்தமாக இலங்கைக்கு தெரிவிக்க வேண்டும்,'. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.-----------

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X