ராஜஸ்தானில் மார்ச்சில் தேசிய லங்காடி விளையாட்டு போட்டி | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
ராஜஸ்தானில் மார்ச்சில் தேசிய லங்காடி விளையாட்டு போட்டி
Added : ஜன 20, 2022 | |
Advertisement
 

முதுகுளத்தூர் : தேசிய அளவிலான லங்காடி விளையாட்டு போட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் மார்ச் கடைசி வாரத்தில் நடைபெற உள்ளது என்று இந்திய லங்காடி அணித்தலைவர் தேவசித்தம் கூறினார்.

தேசிய அளவிலான லங்காடி போட்டி நடைபெற உள்ளதால் தமிழக அணிக்கு இருபாலர் பிரிவிலிருந்து 80 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதுகுறித்து இந்திய லங்காடி அணித்தலைவர் தேவசித்தம் கூறியதாவது, கொரோனா தாக்கத்தினால் இரண்டு ஆண்டுகள் லங்காடி விளையாட்டு போட்டி நடைபெறவில்லை. இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் லங்காடி போட்டியை அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக அறிவிக்கப்பட உள்ளது. இதனால் இந்தமுறை தேசிய அளவில் போட்டி நடைபெறும்.

ஏற்கனவே தேசிய அளவிலான போட்டியில் அதிகமுறை தமிழக அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டிற்கான தமிழக அணிக்கான வீரர்கள் தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து அந்தந்த மாவட்ட தலைநகரில் நடைபெற உள்ளது. இதனையடுத்து சிறந்த வீரர்கள் தேர்வு செய்து போட்டி நடத்தப்படும். பின்பு திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி முகாம் நடத்தி ராஜஸ்தான் மாநிலத்தில் மார்ச்சில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு வீரர்கள் அனுப்பி வைக்கப்படும். ,என்றார். உடன் தமிழக லங்காடி விளையாட்டு கழக தலைவர் தினேஷ் இருந்தார். போட்டி குறித்து இந்திய லங்காடி அணித்தலைவர் தொடர்புக்கு 93445 01995.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X