விதிமீறிய கட்டடங்களுக்கு சிக்கல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
00:43

மூணாறு : தேவிகுளம் தாலுகாவில் மூணாறு உள்பட ஒரு சில பகுதிகளில் டெபுடி தாசில்தார் ரவீந்திரன் விதிமுறைகள் மீறி வழங்கிய பட்டாக்களை ரத்து செய்யுமாறு கலெக்டர் ஷீபா ஜார்ஜ்க்கு அரசு உத்தரவிட்டது.



தேவிகுளம் தாலுகா அலுவலகத்தில் 1999 ல் அடிஷனல் தாசில்தாராக கூடுதல் பொறுப்பு வகித்த டெபுடி தாசில்தார் ரவீந்திரன் விதிமீறி 530 க்கும் அதிகமாக நிலப்பட்டாக்கள் வழங்கினார். அவை சட்டத்திற்கு புறம்பாக வழங்கியதால் ரவீந்திரன் பட்டா என அழைக்கப்படுகிறது. 2007ல் அச்சுதானந்தன் தலைமையிலான இடது சாரி கூட்டணி அரசு மூணாறில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையின் போது ரவீந்திரன் வழங்கிய பட்டாக்கள் குறித்து தெரிந்தது. அவற்றை ரத்து செய்யும் நடவடிக்கை பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஆனது. 1964ல் கேரளா நில பதிவு சட்டம் 893 படியும் 1977 ல் கண்ணன் தேவன் ஹில்ஸ் சட்டம் 21 (1) படியும் தவறான ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய இடுக்கி கலெக்டர் ஷீபா ஜார்ஜ்க்கு வருவாய்துறை ஜன.18ல் உத்தரவிட்டது. ரவீந்திரன் வழங்கிய பட்டா நிலங்களில் பெரும்பாலும் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.சிக்கல்மூணாறில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், நட்சத்திர ஓட்டல்கள் ரவீந்திரன் வழங்கிய பட்டா நிலங்களில் உள்ளன. அவை 2007ல் ஆக்கிரமிப்புகள் அகற்றியபோது விவாதங்களில் சிக்கி தப்பின. அப்பிரச்னை மீண்டும் தலை தூக்கி உள்ளதால் வர்த்தக ரீதியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் புதிய பட்டாக்கள் வழங்க அரசு முன்வந்துள்ளதால் விதிமீறி வழங்கிய பட்டாக்களை ரத்து செய்யும் மறைவில் அதனை சரி செய்யும் யுக்தியாக இருக்க கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X