கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரியை நன்னீர் ஏரியாக மாற்றி, அழகுபடுத்தும் திட்டம் உள்ளது' என நகராட்சி கமிஷனர் நாராயணன் கூறினார்.
அவரது பேட்டி: கொடைக்கானலில் குடிநீர் ஆதாரங்கள் மேம்படுத்தப் பட்டுள்ளதா, தற்போதைய நிலை என்னகொடைக்கானல் நகராட்சியில் 30 ஆண்டு தேவைக்கு தண்ணீர் வைத்துக் கொள்ளும் அளவுக்கு நீராதாரங்கள் தயாராக உள்ளன. தற்போது மனோரஞ்சிதம் சோலை அணையில் ரூ.10 கோடியில் தடுப்பணை பணி நடக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கீழ்க்குண்டாறு குடிநீர் திட்டம் ரூ.51 கோடியில் முழுமை பெற்றதால், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் என்ற நிலை மாறி, தினமும் சப்ளையாகிறது.திடக்கழிவு மேலாண்மை திட்டம் எவ்வாறு செயல்படு கிறதுநகராட்சியில் தினமும் 17 டன் குப்பை கையாளப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தரம் பிரித்து கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பப்படுகிறது. குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் உயிரி எரிவாயு திட்டம் ரூ.75 லட்சத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் நகரிலும் இரண்டு மையம் அமைக்க உள்ளோம். பிளாஸ்டிக் மறுசுழற்சி மூலம் வளமீட்பு பூங்கா ரூ.12 கோடிக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.சுகாதாரத்திற்கு முக்கியத் துவம் அளிக்கப் பட்டுள்ளதாநகரில் சுகாதார வளாகங்கள் ரூ.2.8 கோடியில் நவீனமாக மேம்படுத்தப்படவுள்ளது. நகரில் கசடு நீர் மேலாண்மைக்கு ரூ.3.50 கோடியில் செப்டிக் டேங்க் கழிவுகள் கையாளும் திட்டம் உள்ளது. புதிதாக தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாநகருக்குள் மின் சிக்கனத்தை ஏற்படுத்த 2 ஆயிரம் விளக்குகள் எல்.இ.டி.,யாக மாற்றப்பட உள்ளது. புதிதாக 687 விளக்குகள் அமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.நகராட்சி பணிகள் தொய் வில்லாமல் நடக் கிறதாநகராட்சியை பொருத்தமட்டில் அனைத்து கோப்புகளும் தொய்வில்லாமல் பராமரிக்கப்படுகிறது.ஏரியை அழகுபடுத்தி மேம்படுத்தும் திட்டம் உள்ளதாஏரியை மேம்படுத்தி, அழகுபடுத்த ரூ.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏரியை நன்னீர் ஏரியாக மாற்ற களைச்செடிகளை அகற்ற இயந்திரம் வாங்கப்பட உள்ளது. 'அக்வா போனிக்ஸ்' எனும் மிதக்கும் அழகு தாவரங்கள் ஏரியில் 3 இடங்களில் அமைக்கப்படவுள்ளது. படகு இல்லங்களை நவீனப்படுத்தி புதிய படகுகள் வாங்க உள்ளோம். ஏரி தண்ணீர் மாசு படாமல் இருக்க வெளியில் இருந்து வரும் நீர் 24 இடங்களில் வடிகட்டி, சுத்திகரிப்புக்கு பின்னரே ஏரிக்குள் செல்லும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதனால் கொடைக்கானல் ஏரி நன்னீர் ஏரியாக உருவாகும். போக்குவரத்து நெரிசலை தீர்க்க என்ன ஏற்பாடு உள்ளதுபார்க்கிங் வசதிக்காக கலையரங்கம் பகுதியில் 380 கார்கள், 60 பஸ்கள் நிற்கும் வகையில் 'மல்டி லெவல் கார் பார்க்கிங்' ரூ.25 கோடியில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. நகரில் 3 பூங்காக்கள், திறந்தவெளி பயிற்சிக் கூடம் ரூ.6.50 கோடியில் நவீனமாக்கப்பட உள்ளது. கோக்கர்ஸ் வாக் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் நவீன வசதிகளுடன் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் திட்டம் தயாராகி வருகிறது.கொரோனா கட்டுக்குள் உள்ளதாகொடைக்கானலில் கடந்த மூன்றாண்டுகளில் நோய் தொற்று கட்டுக்குள்தான் உள்ளது. தற்போது மூன்றாம் அலையில் 10 பேர் மட்டுமே பாதித்துள்ளனர். உள்கட்டமைப்பு பணிகள் ஏதேனும் நடக்கிறதாநகராட்சி பி.டி., ரோட்டில் வாரச்சந்தை உள்கட்டமைப்பு பணிகள் நவீன கட்டடம் ஏற்படுத்த ரூ. 3.56 கோடியிலும், நவீன ஆட்டு இறைச்சி கூடத்திற்கு ரூ 1.03 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.திட்டங்களுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு...?கொடைக்கானலில் மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ., கலெக்டர் முயற்சியால் பல திட்டங்களை செயல்படுத்துகிறோம். சுகாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு மக்களும் நன்கு ஒத்துழைப்பு அளித்தால் நகரை மேம்படுத்திவிடலாம்.பொதுமக்கள் தங்களிடம் புகார் தெரிவிக்க வாய்ப்புள்ளதா?பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை அலுவலகத்தில் சந்திக்கலாம். 73973 96280 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.