கடமலைக்குண்டு : கம்பத்தில் ஜனவரி 7ல் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ரவிக்குமார் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருஷநாட்டில் பா.ஜ., ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ராஜபாண்டி, பா.ஜ.,மாவட்ட துணை தலைவர் குமார், மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் மாயகிருஷ்ணன், ஒன்றிய பொதுச் செயலாளர் ஜெயபாண்டி, ஒன்றிய தலைவர்கள் கருப்பசாமி, மணிகண்டன் ஆகியோர் கூடினர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததால் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஆண்டிபட்டி டி.எஸ்.பி., தங்க கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் குமரேசன், சிவகுமார் தலைமையில் 60 பேரை கைது செய்தனர். சில மணி நேரத்தில் விடுவித்தனர்.