திருப்பூர்:திருப்பூரில் மனைவியை வெட்டி கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.தென்காசி மாவட்டம், காசிதர்மம் பகுதி யைச் சேர்ந்தவர் குமார், 32; டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி, 25; இரு மகன்கள் உள்ளனர்.
தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நான்கு மாதங்களுக்கு முன் தனலட்சுமி பிரிந்து சென்றார். திருப்பூர், ரங்கநாதபுரம் ஜெ.ஜெ.நகரில் தங்கி, பனியன் நிறுவனத்தில் தனலட்சுமி பணிபுரிந்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், திருப்பூர் வந்த குமார், மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தார். நேற்று அதிகாலை, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த குமார், அரிவாளால் தனலட்சுமியை தலை, கழுத்து என பல இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.பின், அரிவாளுடன் வேலம்பாளையம் கிராமநிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார். வேலம்பாளையம் போலீசார், குமாரை கைது செய்தனர்.