பெண் குத்தி கொலை: 6 -சவரன் தாலி கொள்ளை | ஈரோடு செய்திகள் | Dinamalar
பெண் குத்தி கொலை: 6 -சவரன் தாலி கொள்ளை
Added : ஜன 21, 2022 | |
Advertisement
 

பவானி:பவானி அருகே பட்டப்பகலில் பெண்ணை கொன்று 6 சவரன் தாலியை கொள்ளை அடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


ஈரோடு மாவட்டம் பவானி அருகே கே.கே.நகரில் வசிப்பவர் கணேசன். தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வளர்மதி 55. இரண்டு மகள்கள் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர்.நேற்று காலை பவானியில் உள்ள கருவூலத்திற்கு கணேசன் சென்றார். மதியம் அவர் வீடு திரும்பியபோது முன்பக்க கதவு திறந்து கிடந்த நிலையில் வளர்மதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 6 சவரன் தாலி செயின் காணாமல் போயிருந்தது.
ஆனால் கையில் அணிந்திருந்த வளையல் காதில் இருந்த தோடு வீட்டில் இருந்த பணம் மற்ற நகைகள் கொள்ளை போகவில்லை.சித்தோடு போலீசார் கூறுகையில் 'வளர்மதி தனியாக இருப்பதை கொள்ளையர்கள் நோட்டமிட்டு உள்ளே புகுந்து இருக்க வேண்டும். அவரிடம் இருந்து தங்க சங்கிலியை பறிக்கும் போது வளர்மதி கூச்சலிட்டிருக்கலாம். இதனால் அவரை கத்தியால் குத்திவிட்டு தாலிக்கொடியை மட்டும் பறித்து தப்பியிருக்கலாம்' என்றனர். அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X