'கை நீட்டிய' மணமகன் நின்றுபோனது 'கால்கட்டு'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
01:59

பண்ருட்டி,:திருமண விழாவில் நடனமாடிய மணமகளை மணமகன் அடித்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து வேறு வாலிபருடன் அப்பெண்ணுக்கு திருமணம் நடந்தது.


கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் 29. பி.இ. படித்து சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பண்ருட்டி போலீஸ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசந்தியா 23; எம்.எஸ்.சி. பட்டதாரி. இரு வீட்டார் ஏற்பாட்டில் காடாம்புலியூரில் திருமணம் நடக்க இருந்தது.
நேற்று முன்தினம் இரவு பெண் அழைப்பு விருந்து பாட்டு கச்சேரி நடந்தது.நிகழ்ச்சியில் மணப்பெண் ஜெயசந்தியா மணமகன் ஸ்ரீதர் ஆகியோர் பாட்டுக்கு நடனமாடினர். அப்போது மணமகளின் சகோதரர் முறையில் உள்ள உறவினர் ஒருவரும் சேர்ந்து நடனமாடினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீதர் ஜெயசந்தியாவை திடீரென கன்னத்தில் அறைந்தார். ஆத்திரமடைந்த ஜெயசந்தியா ஸ்ரீதரை திருமணம் செய்ய முடியாது எனக் கூறி அழுதார்.
பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்தை நிறுத்தினர். சீர்வரிசை பொருட்களோடு மணமகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.இரவோடு இரவாக உறவினர்கள் கூடிப் பேசி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஜெயசந்தியாவிற்கும் திருமணத்திற்கு வந்திருந்த உறவினரான செஞ்சியைச் சேர்ந்த கோபிநாத் 26 என்பவருக்கும் திருமணம் நடத்தினர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X