தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், ஒரே நாளில், 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.கோவை மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், நாள்தோறும் சராசரியாக, 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.நேற்றுமுன்தினம், 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று, பூலுவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், 5 பேருக்கும், கரடிமடை பகுதியில், 9 பேரும், நரசீபுரம் பகுதியில், 7 பேரும், பூச்சியூர் பகுதியில், 15 பேரும், செம்மேடு பகுதியில், 2 பேரும் என, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் நேற்று ஒரே நாளில், 38 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.