சூதாட்ட கும்பல் கைது
அய்யன் தோட்டம், எம். தொட்டிபாளையம் நடுப்பட்டியில் சூதாட்டம் நடப்பதாக, ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீஸ் சென்றபோது, சூதாட்ட கும்பல் தப்பியோட முயன்றது. சுற்றிவளைத்த போலீசார், ஊத்துக்குளியை சேர்ந்த பாஸ்கர், 58; கதிர்வேல், 46; சபரீஸ், 32; முருகானந்தம், 48, பிரகாஷ், 36; விஸ்வநாதன், 42; ராமேஷ்வரன், 40; செந்தில்குமார், 40 ஆகிய எட்டு பேரை கைது செய்து, 2.24 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.