கோவை:கோவை காமாட்சிபுரி ஆதீனம், 51 சக்தி பீடம் கோவிலில், மகாசக்தி அங்காளபரமேஸ்வரி அன்னையின், 41ம் ஆண்டு திருக்கல்யாண மகா உற்சவம், குண்டம் திருவிழா நடக்கிறது.காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நாளை முதல் தினமும், விநாயகர் வேள்வி, அம்மன் அபிஷேகம் என, 26ம் தேதி குண்டம் திருவிழா நடக்கிறது. அன்று மகா சக்தி வேள்வி, மகா அபிஷேகம், மாரியம்மன் உற்சவம், ஊஞ்சல் உற்சவம் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. 27ம் தேதி சிவபெருமான் அபிஷேகம், 28ம் தேதி பரி வேட்டை, குதிரை வாகன உற்சவம், மகிஷாசூரன் வதம் என பல்வேறு நிகழ்ச்சிகள்நடக்கின்றன.