ரூ.5.20 ரூபாய் மதிப்பூதியம்; போலீசாருக்கு வழங்க உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
05:12

புதுச்சேரி-சட்டசபை தேர்தலில் பணியாற்றிய 3,727 போலீசாருக்கு மதிப்பூதியமாக,5.20 கோடி ரூபாய் வழங்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.



புதுச்சேரி சட்டசபைக்கு கடந்தாண்டு ஏப்., 6ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 81.70 சதவீத ஓட்டுகள் பதிவாகின. என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.தேர்தல் பணியில் போலீஸ், வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 13 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.ஓட்டுபதிவு போன்ற குறிப்பிட்ட சில நாள் பணிக்கு வந்தவர்களுக்கு உடனடியாக அதற்கான தொகை வழங்கப்பட்டது.

தேர்தல் அறிவிப்பு முதல் ஓட்டுப்பதிவு வரை, தேர்தல் பணியில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மதிப்பூதியம் என்ற பெயரில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, சட்டசபை தேர்தலில் பணியாற்றிய வருவாய் துறை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் மதிப்பூதியம் தர அரசு உத்தரவிட்டு, அதில் 50 சதவீதம் வழங்கப் பட்டது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, சட்டசபை தேர்தலில் முதன் முறையாக களம் இறக்கப்பட்ட சுகாதார பணியாளர்களுக்கும் மதிப்பூதியம் தரப்பட்டது.துவக்கம் முதல் கடைசி வரை தேர்தல் களத்தில் இருக்கும் காவல் துறையினரை பொறுத்தவரை, உள்துறை வாயிலாக ஒப்புதல் பெற்று, நிதி ஒதுக்கீடு செய்த பிறகே மதிப்பூதியம் வழங்குவது நடைமுறை வழக்கம்.

அதன்படி, சட்டசபை தேர்தலில் ஈடுபட்ட காவலர்களுக்கு மதிப்பூதியம் வழங்க, உள்துறை வாயிலாக கவர்னர் தமிழிசைக்கு கோப்பு அனுப்பப் பட்டு இருந்தது.இந்த கோப்பிற்கு கவர்னர் தமிழிசை தற்போது அனுமதி தந்துள்ளார்.இதில், சட்டம் ஒழுங்கு போலீசார், ஐ.ஆர்.பி.என்., போலீசார் 3,258 பேர் பயனடைவர். அவர்களுக்கு 4 கோடியே 81 லட்சத்து 20 ஆயிரத்து 864 ரூபாய் தேர்தல் மதிப்பூதியமாக வழங்கப்பட உள்ளது.ஊர்க்காவல் படையினரை பொறுத்தவரை புதுச்சேரி பிராந்தியத்தில் -363, காரைக்கால்-53, மாகி-25,ஏனாம்-28 பேர் என 469 பேர் தேர்தல் பணியாற்றினர்.அவர்களுக்கு தேர்தல் மதிப்பூதியமாக தர 39 லட்சத்து 63 ஆயிரத்து 463 ரூபாய்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது, ஊர்க்காவல் படை வீரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த மதிப்பூதிய தொகை இரண்டு தவணைகளில் வழங்கப்படும். இந்த நிதியாண்டு 50 சதவீதமும், அடுத்த நிதியாண்டில் 50 சதவீதம் பட்ஜெட் ஒதுக்கீட்டை பொறுத்து வழங்கப்படும் என உள்துறை அறிவித்துள்ளது.ஒட்டுமொத்தமாக போலீஸ் துறையை சேர்ந்த 3,727 பேருக்கு மதிப்பூதியம் வழங்க, அரசுக்கு 5 கோடியே 20 லட்சத்து 84 ஆயிரத்து 324 ரூபாய் செலவாகும்.இதற்கான உத்தரவை, சார்பு செயலர் ஷிரன் பிறப்பித்துள்ளார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X