மிரட்டுகிறது கொரோனா தொற்று
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
05:16

கோவை புறநகர் பகுதியில் சிறு நகரப்பகுதிகளை பதம் பார்த்த கொரோனா தொற்று கிராமப்பகுதிகளிலும் அதிகளவில் பரவி வருகிறது.சூலூர் வட்டாரத்தில், நேற்று ஒரே நாளில், 300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கவனத்துடன் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.சூலூர் வட்டாரத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில், இதுவரை, 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.ஊரக வளர்ச்சித்துறையினர், சுகாதாரத் துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், நேற்று ஒரே நாளில் சூலூர் வட்டாரத்தில், 300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சூலூர் வட்டார மருத்துவ அலுவலர் உமர் பாரூக் கூறுகையில், "நேற்று ஒரே நாளில் மட்டும் இதுவரை இல்லாத வகையில், 300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. எங்களின் கண்காணிப்புக்குள் அவர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.தமிழ்நாடு பொறியியல் கல்லூரியிலும், கே.ஐ.டி., கல்லூரியிலும் கேர் சென்டர்கள் தயார் நிலையில் உள்ளன. இன்று (நேற்று) முதல் பாதிக்கப் பட்டவர்கள் அங்கு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகள் தொடர்ந்துஅளிக்கப்படும்" என்றார்.அன்னூரில் 23 பேருக்கு தொற்று அன்னூர் பேரூராட்சியில், நேற்று அ.மு.காலனி, அவிநாசி ரோடு, சத்தி ரோடு, கோவை ரோடு உள்ளிட்ட பகுதியில், 23 பேருக்கு தொற்று உறுதியானது. ஊராட்சிகளில், சந்தையூர், முதலிபாளையம், மைல்கல், பொன்னே கவுண்டன் புதூர் உள்ளிட்ட இடங்களில் 24 பேருக்கு தொற்று உறுதியானது. அன்னூர் ஒன்றியத்தில் 47 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 'அன்னூர் பேரூராட்சியில் இரண்டு இடங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் அப் பகுதியில் இன்று சீல் வைக்கப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர். எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், கோவில்பாளையம் பேரூராட்சியில், நேற்று 19 பேருக்கு தொற்று உறுதியானது.இதுவரை கொண்டையம்பாளையம் ஊராட்சியில் ஆறு பேருக்கு, கீரணத்தம், அத்திப்பாளையம் ஊராட்சிகளில், தலா நான்கு பேருக்கு, கள்ளிப்பாளையம் ஊராட்சியில் மூவருக்கு, வெள்ளாணைப்பட்டியில் இருவருக்கு, வெள்ளமடையில் ஒருவருக்கு என 45 பேருக்கு தொற்று உறுதியானது,அன்னூர் தாலுகாவில் நேற்று 92 பேருக்கு தொற்று உறுதியானது.பெ.நா.பாளையம்நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை, 47 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், நாகாளம்மன் நகர் உள்ளிட்ட பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில், 8 பேருக்கு தொற்று ஏற்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. நேற்று மட்டும், 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை, 67 ஆக உயர்ந்துள்ளது.வாரம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசிபெரியநாயக்கன்பாளையம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல் கூறுகையில், "வாரந்தோறும், வியாழக்கிழமை பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தப்படும். இது தவிர, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் உள்ள தாளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மத்தம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாரம் முழுவதும் முதல், இரண்டாம் கட்ட தடுப்பூசிகளும், பூஸ்டர் தடுப்பூசிகளும் செலுத்தப்படும். இது தவிர, வாரந்தோறும் சனிக்கிழமை மெகா முகாம்கள் நடத்தப்பட்டு முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார். - - நமது நிருபர் குழு -

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X