அரியாங்குப்பம்-புற்றுநோயால் பாதிக்கப் பட்ட மனைவிக்கு சிகிச்சை அளித்தும் குணமாகாததால் மனமுடைந்த கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.முருங்கப்பாக்கம், வில்லியனுார் சாலையை சேர்ந்தவர் பெருமாள்,57; தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மன உளைச்சலில் இருந்த பெருமாள் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.