புதுச்சேரி-முருங்கப்பாக்கம், அரவிந்தர் நகரில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூ., சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.முருங்கப்பாக்கம், கடலுார் சாலை சந்திப்பில் இருந்து சுகதேவ் தலைமையில், ஊர்வலமாக சென்று, அரவிந்தர் நகர் வாயிலில் மறியலில் ஈடுபட்டனர்.மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அபிஷேகம், கீதநாதன், சரளா உள்ளிட்டோர் கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர்.முருங்கப்பாக்கம், அரவிந்தர் நகரில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும். மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும்.ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மினி பஸ்சை மீண்டும் இயக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.