புதுச்சேரி-ஏனாமில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், நடைபெற இருந்த மக்கள் விழா மற்றும் மலர் கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து ஏனாம் பிராந்திய நிர்வாகி அமன்சர்மா ளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஏனாமில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் பொருட்டு, நடைபெற உள்ள மக்கள் விழா மற் றும் மலர் கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இரவு 11:00 மணி முதல் விடியற்காலை 5:00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஒய்.எஸ்.ஆர்., மைதானத்தில் இந்திய விளையாட்டு ஆணைய வீரர்கள் மற்றும் போலீஸ் பணிக்கான தேர்வர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர். அவர்கள், இரு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.