புதுச்சேரி-புதிதாக துவங்கப்பட்டுள்ள எம்.டி., - எம்.எஸ்., மருத்துவ மேற்படிப்புகளுக்கு இன்றைக்குள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சென்டாக் அறிவித்துள்ளது.பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் எம்.டி., பல்மனரி மெடிசன், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரியில் எம்.எஸ்., இ.என்.டி., - எம்.டி., சைக்யாட்ரி ஆகிய படிப்புகள் துவக்கப்பட்டு உள்ளன.இப்படிப்புகளில் சீட் ஒதுக்கீடு பற்றிய விபரங்கள் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.எனவே, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களுடைய டேஷ்போர்டு மூலம், முதற்கட்ட கலந்தாய்வுக்கான பாடப்பிரிவு முன்னுரிமையை இன்று 21ம் தேதி மாலை 6.௦௦ மணிக்குள் தேர்வு செய்யலாம்.இதுவரை பாடப்பிரிவுகளை முன்னுரிமை கொடுக்காமல் உள்ளவர்களும் முன்னுரிமை கொடுக்கலாம். மேலும் தகவல்களை சென்டாக் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.இத்தகவலை, சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.