காரைக்கால்,-தேசிய அளவிலான வலு துாக்கும் போட்டியில் பதக்கம் வென்ற காரைக்கால் மாணவர்களை அமைச்சர் சந்திர பிரியங்கா பாராட்டினார்.ராஜஸ்தான் மாநிலம் உதம்பூரில் தேசிய அளவிலான ஜூனியர், சப் ஜூனியர் வலுதூக்கும் போட்டி நடைபெற்றது.இதில், காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி மாணவி ஹெலான்ஜி, 52 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.தேனுார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் விக்ரம், 53 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம், கோட்டுச்சேரி வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பூங்குழலி 43 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.ஊர் திரும்பிய மாணவர்கள் நேற்று முன்தினம் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்காவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், நாகதியாகராஜன், மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா ஆகியோர், பதக்கம் வென்ற மாணவர்களை பாராட்டினர் பயிற்சியாளர் கணேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.