மின்துறை தனியார் மயமாக்கலை கண்டித்து 1ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
05:26

புதுச்சேரி-மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட, துறை பொறியாளர்கள், ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொறியாளர்கள், ஊழியர்கள் ஒருங்கிணைந்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு அமைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அரசு தரப்பில், மின்துறையை தனியார் மயமாக்குதல் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நேற்று, திப்புராயப்பேட்டையில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது.தலைமை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் தலைமை தாங்கினார். சார்பு செயலர் முருகேசன், சிறப்பு அதிகாரி ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பேசிய மின்துறை பொறியாளர்கள் மற்றும் போராட்டக் குழுவினர், 'நாங்கள் அரசு ஊழியராக பணியில் சேர்ந்தோம். அரசு ஊழியராகவே ஓய்வு பெற வேண்டும். மத்திய அரசு 2003ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், வாரியமாக செயல்படும் மின்துறை மற்றும் நஷ்டத்தில் இயங்கும் மின்துறைகளை மட்டுமே தனியார் மயமாக்க பரிந்துரைத்தது.புதுச்சேரி மின் துறை அரசு துறையாக உள்ளது. லாபத்தில் இயங்கி வரும் நிலையில், ஏன் தனியார் மயமாக்க வேண்டும். இதற்கு, தற்போதைய மக்கள் பிரதிநிதிகள் ஒப்புக் கொள்கின்றனரா' என கேள்வி எழுப்பினர்.நீண்ட விவாதத்திற்கு பிறகும், அரசு தரப்பில் எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.அதையடுத்து, போராட்டக் குழு, ஏற்கனவே எடுத்த முடிவின்படி, தனியார் மயமாக்கல் முடிவை கைவிடக் கோரி, பிப்., 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X