கோத்தகிரி:கோத்தகிரி அருகே கோழித்துறை கிராமத்தில், இயற்கை பொருட்களின் வண்ணத்தில், பழமை வாய்ந்த ஓவியங்களை, 5ம் வகுப்பு மாணவி வரைந்து அசத்துகிறார்.கோத்தகிரி அருகே, கொணவக்கரை பேரூராட்சி செம்மனாரை அருகே கோழித்துறையில், ஆனந்தன், யோகதுர்கா தம்பதியினரின் மகள் தர்ஷினி,11. மாமரம் அரசு பள்ளி, 5ம் வகுப்பு மாணவி. இவர் கடந்த, 2 ஆண்டுகளில், 50 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரைந்துள்ளார்.தர்ஷினி கூறுகையில்,''கொரோனா ஊரடங்கில் நேரத்தை வீணாக்காமல், ஓவியங்கள் வரைந்தேன். வேங்கை மரத்தின் பால் உட்பட இயற்கை சார்ந்த பொருட்களில் கிடைக்கும் வண்ணங்கள் பயன்படுத்தி ஓவியம் வரைந்து வருகிறேன்,''என்றார்.பழங்குடியின மக்கள் ஆராய்ச்சியாளர் திருமூர்த்தி கூறுகையில்,''குரும்பா பழங்குடி மக்களின், மிகவும் பழமையான பாறை ஓவியங்களை மாணவி வரைந்து வருகிறார். இதில், விவசாயம், தேன் எடுத்தல், இயற்கை வழிபாடு உள்ளிட்டவை முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றை பாதுகாக்க அரசு உதவ வேண்டும்,'' என்றார்.