புதுச்சேரி-வருங்கால வைப்பு நிதி ஓய்வூதிய தொகையை உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.வருங்கால வைப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் ஓய்வூதிய தொகையை உயர்த்தக் கோரி மத்திய பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. புதுச்சேரியில் நுாறடி சாலையில் உள்ள வருங்கால் வைப்பு நிதி அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தலைவர் ஆசைதம்பி முன்னிலை வகித்தார்.தற்போது வழங்கப்படும் வரும் குறைந்த பட்ச ஓய்வூதிய தொகையான 1000 ரூபாயை 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஓய்வூதியம் பெற கூடிய தொழிலாளர்களை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.