பழங்குடியினருக்காக 592 பசுமை வீடு : மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
05:27

ஊட்டி:''நீலகிரியில், பழங்குடியினருக்காக, 592 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது,'' என, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் கூறினார்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில், பண்டைய பழங்குடியினர் மக்கள் கூட்டமைப்பின், கலந்தாய்வு கூட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன் பங்கேற்று பேசியதாவது:நீலகிரியில் வாழும் பழங்குடியினருக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மலை மாவட்டத்தில் பல சிரமங்கள் இருந்தாலும் மத்திய, மாநில அரசின் எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், யாரும் வறுமையில் இருக்க கூடாது என்பதற்காக, 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. அதில், பழங்குடியினரின் பங்களிப்பு குறைவாக உள்ளது.நீலகிரியில் வாழும், பழங்குடியினர் பயனடையும் வகையில், 592 தொகுப்பு வீடு, பசுமை வீடுகள் மத்திய, மாநில அரசின் நிதியின் மூலம் கட்டப்பட்டு வருகிறது. பழங்குடியினர் எங்கள் துறையுடன் தொடர்பில் இருந்து, பிரச்னைகளை தெரிவித்து, எண்ணற்ற திட்டங்கள் மூலம் பயனடைய வேண்டும். இவ்வாறு, ஜெயராமன் பேசினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X