கூடலுார்:கூடலுாரிலிருந்து, கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற, 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, கர்நாடகாவுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளை மறைத்து வைத்திருப்பதாக, தகவல் கிடைத்தது. ஆர்.டி.ஓ., சரவண கண்ணன் தலைமையில் குடிமைப்பொருள் தனி தாசில்தார் சரவணன், நேற்று முன்தினம், மாலை அப்பகுதியில் சோதனை செய்து, கர்நாடகாவுக்கு கடத்துவதற்காக, மூட்டைகளில் மறைக்கு வைத்திருந்த, 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.